Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி… மனமுடைந்த கணவன்… பரிதாபமாக போன உயிர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவி தகராறில் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள வரகூராம்பட்டி பெரியதோட்டம் பகுதியில் கந்தசாமி(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி என்ற மனைவியும், ரிதன்யா, மகிழன் என்ற பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கந்தசாமி நாகபட்டணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அமிர்தவள்ளி கோபித்துக்கொண்டு பிள்ளைகளுடன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதற்கிடையில் கந்தசாமி ஊரடங்கினால் வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மனைவியும் விட்டுசென்றதால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்த கந்தசாமி நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைப்பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். மேலும் தகவலறிந்து வந்த திருச்செங்கோடு ரூரல் காவல்துறையினர் கந்தசாமியின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |