உள்நாட்டு விமானங்களில் 65% வரை பயணிகளை ஏற்றி செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமெடுத்ததை அடுத்து தமிழகத்தில் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தற்போது தொற்று படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்தபாடில்லை. இதன் காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளை அளித்துள்ளது. அந்த தளர்வுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து இருந்ததால் உள்நாட்டு விமானங்களில் 50% பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால் உள்நாட்டு விமானங்களில் 65% பயணிகளை ஏற்றி செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.