Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் என்றால் இவர்தான்… எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவார்… கேஎல் ராகுல் புகழாரம்…!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக  2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இவர் ஓய்வு அறிவித்தது இவரது ரசிகர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. தோனி தலைமையிலான இந்திய அணி பல சாதனைகளை செய்துள்ளது. இவரைப் பற்றி பல வீரர்களும் புகழ்ந்து கூறுவது உண்டு.

அந்த வகையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் கூறியதாவது: “இந்திய அணி கேப்டன் என்றால் எங்கள் நினைவுக்கு வரும் முதல் பெயர் தோனி மட்டுமே. இந்த தலைமுறைக்கு அப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை அவரை மட்டுமே சாரும். பல சாதனைகளை செய்த போதும் தன்னைப் பற்றி எதையும் பெருமையாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரண மனிதராகவே எப்பொழுதும் போல் இருப்பார். அவர் சக வீரர்களை மரியாதையாக நடத்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்காக நாங்கள் எந்தவித யோசனையும் இன்றி துப்பாக்கி குண்டுகளை கூட தாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |