முகநூல் பக்கத்தில் இருந்து மக்களின் கடவுச்சொற்களை திருடிய காரணத்திற்காக ஒன்பது செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அனைவருமே முகநூல் பக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர். தங்களது போட்டோக்கள், ஸ்டோரி, வீடியோ என்று அனைத்தையும் முகநூல் பக்கங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த முகநூல் பக்கங்களை பயன்படுத்தும் அனைவரும் அதற்கு கடவுச்சொல் என்ற அமைப்பை போட்டு வைத்திருப்பார்கள். ஏனென்றால் யாரும் தேவையில்லாமல் அதைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்திருப்பார்கள்.
ஆனால், இந்த ஒன்பது செயலிகள் முகநூல் பக்கங்களில் உள்ள கடவுச்சொற்களை திருடியுள்ளன. இந்த செயலிகள், மக்கள் தங்கள் முகநூல் பக்கத்தை இணைப்பதன் மூலம் அவர்களின் கடவுசொல்களை திருடுகிறது என்று எழுந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயல்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த செய்திகளை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த செயலிகள்,
1) RIP Photo
2) processing photo
3) Rubblish cleaner
4) Horoscope Daily
5) App lock Keep
6) Lockit Master
7) Horoscope pi
8) App lock manager
9) inwell fitness