Categories
உலக செய்திகள்

இதுனால எவ்ளோ இழப்புகள்..! இறுதிச் சடங்கில் நேர்ந்த சோகம்… காவல்துறையினர் வெளியிட்ட அதிர்ச்சி..!!

கம்போடியாவில் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்ற 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்போடியாவில் கிராம விழாக்கள், திருமண விருந்துகள், இறுதிச்சடங்கு என அனைத்திலும் அரிசி மது பரிமாறப்படுவது வழக்கமான ஒன்றாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலோர கம்போட் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த இறுதி சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்களில் 11 பேர் பரிமாற்றப்பட்ட மதுவை குடித்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் அந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மது விஷத்தன்மை கொண்ட மெத்தனாலால் காய்ச்சப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே கம்போடியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் 30-க்கும் மேற்பட்டோர் மெத்தனால் காய்ச்சப்பட்ட மதுவை குடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |