ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சாரம் கசிவால் வீட்டில் தீ பற்றியதில் நகை, பணம் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள தேரங்குளம் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் வருகின்றார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்துள்ளது. அப்போது ஏற்பட்ட மின் கசிவால் மாடசாமியின் வீடு தீ பிடித்துள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு அலுவலர் பொன்னையா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். இருப்பினும் வீடு முழுவதிலும் தீ பரவியதால் பீரோவில் வைத்திருந்த நகை, பணம் வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆகியவை தீயில் கருகியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து கடலாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.