பிரித்தானிய அமைச்சர் முகக்கவசம் அணிவதும் அணியாமல் இருப்பதும் ஜூலை 19-ஆம் தேதிக்கு பிறகு அவரவர் தனிப்பட்ட விருப்பமாக கருதப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் வருகின்ற ஜூலை 19-ஆம் தேதிக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகள் முடிவுக்கு வர இருப்பதாக பிரித்தானிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வீட்டுவசதி செயலாளரான ராபர்ட் ஜென்ரிக் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசம் அணிவதும் பிரித்தானிய மக்களின் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து விரைவில் அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.