ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், திருப்பங்களும் உண்டாகும்.
மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி ஏற்படும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் தலைதூக்கும்.
கடன்கள் வாங்க வேண்டாம். குடும்ப பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பது நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 2.
அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.