Categories
உலக செய்திகள்

இத என்ன செய்யலாம்…? திடீரென்று அடித்த ஜாக்பாட்…. திக்குமுக்காடிய இந்தியர்….!!

இந்தியாவைச் சேர்ந்த நபருக்கு லாட்டரி குலுக்கலில் 20 மில்லியன் திர்ஹாம் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள கேரளாவில் சோமராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து துபாயிலுள்ள பல நிறுவனங்களில் டிரைவர் வேலையை பார்த்துள்ளார்.

இவர் சமீபத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கான லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு தொகையாக 20 மில்லியன் திர்ஹாமும், 2 ஆம் பரிசு தொகையாக 3 மில்லியன் திர்ஹாமும், 3 ஆம் பரிசு தொகையாக 1 மில்லியன் திர்ஹாமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோமராஜனினுடைய லாட்டரி டிக்கெட் எண்ணிற்கு முதல் பரிசு தொகை விழுந்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த சோமராஜன் “நான் என்னுடைய குடும்பத்தோடு கலந்து பேசி இந்தப் பரிசுத்தொகையை என்ன செய்வது என்று முடிவு செய்வேன்” என்றுள்ளார்.

Categories

Tech |