Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா படத்தின் படப்பிடிப்பு துவக்கம்… வெளியான தகவல்…!!!

சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் இமான் இசையில் தயாராகி வரும் நடிகர் சூர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ஆம் தேதி, பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த பூஜையில் சூர்யாவை தவிர மற்ற அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டனர். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நாயகி பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இதைதொடர்ந்து சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ், உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர் .இதில் வில்லனாக நடிப்பதற்கு சில முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் காரைக்குடியில் இன்று படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

Categories

Tech |