பெயிண்டு அடிக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .
திருவண்ணாமலை மாவட்டம் போரூர் அருகே உள்ள தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2-ஆம் தேதி போரூர் அண்ணாநகர் விரிவாக்கத்தில் உள்ள வேல்முருகன் என்பவருடைய வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி 7 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் போரூரில் முதலுதவி அளிக்கப்பட்டு பின் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .இதுகுறித்து போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.