Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! செலவுகள் அதிகரிக்கும்….! திறமை வெளிப்படும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! எதிரிகளின் தொல்லை இல்லை.

இன்று சிலர் உதவிகள் செய்வது போல பசங்க செய்யக்கூடும். உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். வியாபாரத்தில் உள்ள தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். அலுவலகத்தில் திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கிவிடும். மற்றவர்களின் ஆலோசனை கேட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பீர்கள். உங்களை நாடி வருபவர்களுக்கு ஆலோசனையை கொடுப்பீர்கள். உங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வரக்கூடும். நட்பு  மத்தியில் நல்ல பெயர் உருவாகும். எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவுகள் எடுப்பீர்கள். எதிரிகளின் தொல்லை இல்லை. குடும்பத்தை பொறுத்தவரை உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்ட கூடிய நல்ல சூழல் இருக்கின்றது. வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். காதல் எந்த வகையிலும் உங்களுக்கு பிரச்சனையை கொடுக்காது. மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழல் உருவாகும். மாணவர்கள் கல்வியிலும் அரசாங்க வேலைக்காக படித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். அதற்கான தகவல் பரிமாற்றம் கண்டிப்பாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பின்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 6                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் வெள்ளை

Categories

Tech |