மீனம் ராசி அன்பர்களே.! மன நிம்மதி அதிகரிக்கும்.
இன்று உங்களுடைய எதிர்கால திட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் நாம் எப்படி முன்னேறி செல்கின்றோம் என்கின்ற அட்டவணை தெளிவாக இருக்கின்றது. வருமானத்தை பெருக்கிக் கொள்ள கூடிய சூழல் இருக்கின்றது. தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றங்களை பின்பற்றுவீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். கடனாக கொடுத்த பணம் மீண்டும் வந்துவிடும். தாயின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும் மனோதிடமும் அதிகரிக்கும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கண்டிப்பாக கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி செல்லும்.
ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பெரியோர்கள் சொல்கின்ற அறிவுரையை கேட்டுக் கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். மனோ தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். பெண்கள் எதிலும் உற்சாகமாக காணப்படுவீர்கள். பெண்கள் செய்யக் கூடிய காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். காதல் பிரச்சனையை கொடுக்காது. காதல் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். கடந்தகால பிரச்சினைகளில் உள்ள காதல் கூட இப்பொழுது சரியாகும். மாணவர்கள் முடிவுகளில் தெளிவாக இருப்பீர்கள். கல்வியில் முன்னேறி செல்வீர்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் மாற்றத்தை கொடுக்கும் அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை