Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! அதிருப்தி ஏற்படும்….! சிக்கனம் தேவை….!!

கும்பம் ராசி அன்பர்களே.! மனம் தளராமல் இருக்க வேண்டும்.

இன்று சில செயல் உங்கள் மனதிற்கு அதிருப்தியை உருவாக்கி கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். கடன் வாங்க கூடிய சூழல் இருக்கின்றது. அவசியமற்ற வகையில் பல செலவுகளை தவிர்க்க வேண்டும். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். பிள்ளைகளுடைய விஷயத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். காரியம் முடியும் வரை ஓயாமல் உழைத்து வேண்டும். அப்பொழுது தான் வெற்றி கிடைக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். தேவையில்லாத செலவுகளில் கவனம் செலுத்த வேண்டாம். சேமிப்பை உயர்த்த முடிவெடுக்க வேண்டும். கவனமாக எதிலும் ஈடுபடுவதும் முன்னேற்றத்தை தரும். கணவன்-மனைவிக்கு இடையே அன்பு கூடும்.

மனம் தளராமல் இருக்க வேண்டும். மனம் தளர்ந்து விட்டால் காரியத்தில் வெற்றி ஏற்படாது. காதல் கசக்கும். காதலின் நிலை மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். சூழ்நிலையை புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். முடிவுகளை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். மாணவர்களின் செயல் திறனை அதிகப்படுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம். இன்று மாணவர்கள் மேற்கல்விக்கான முயற்சியில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை

Categories

Tech |