பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை திருடும் ஒன்பது செயலிகளை டாக்டர் வெப்ஸ் மால்வேர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் பயன்படுத்துகின்றன. இவர்கள் அனைவரும் ஃபேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற இணைய வசதிகளை பயன்படுத்துகின்றனர். இதில் இணைய மோசடி மற்றும் தனிப்பட்ட தரவின் திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கண்டுபிடித்து கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து அவற்றை அதிரடியாக நீக்கி கொண்டு வருகின்றது. அதேபோல் தற்போது பேஸ்புக் பயனாளர்களின் லாகின் ஐடி மற்றும் கடவுச்சொல்லை திருடும் ஒன்பது ஆண்ட்ராய்டு செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த செயலிகள், மக்கள் தங்கள் முகநூல் பக்கத்தை இணைப்பதன் மூலம் அவர்களின் கடவுசொல்களை திருடுகிறது என்று எழுந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயல்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த செய்திகளை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த செயலிகள்,
1) RIP Photo
2) processing photo
3) Rubblish cleaner
4) Horoscope Daily
5) App lock Keep
6) Lockit Master
7) Horoscope pi
8) App lock manager
9) inwell fitness