அஜித் ரசிகர்கள் கோவிலில் சாமி ஆடும் பூசாரியிடம் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார் . மேலும் வில்லனாக கார்த்திகேயன் நடிக்க, இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டும் படமாக உள்ளது. அது விரைவில் முடிக்கப்பட்டு விடும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாத கடைசியில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அநியாயம் பண்றானுங்க நம்ம பசங்க🤣🤣😅😆 வலிமை அப்டேட்#ValimaiUpdate #AjithKumar pic.twitter.com/ca7Xw5mJTd
— குமரி மாவட்ட அஜித் ரசிகர்கள் (@Kumarimavatam74) July 4, 2021
ஆனால் இந்த படத்தை பற்றி ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். சில ஊர்களில் போஸ்டர் அடித்து படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். தற்போது ஒருபடி மேலே சென்று சாமி ஆடும் கோயில் பூசாரியிடம் சென்று ஐயா வலிமை அப்டேட் சொல்லுங்கள் என கேட்டுள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.