செந்துறை அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பேருந்தை ஓட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கட்டி முடிக்கப்பட்ட புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்தை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தொடங்கிவைத்தார். இதையடுத்து இவரே பேருந்தை ஒரு கிலோமீட்டர் தூரம் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை ஓட்டி சென்றார். இதனை பார்த்த மக்கள் அனைவரும் அவருடன் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டனர்.
https://twitter.com/Im_kannanj/status/1412003455850356737
ஆனால் இதில் சமூக இடைவெளி என்பது எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. மேலும் அங்கிருந்த மக்களில் பலரும் முகக் கவசம் அணிய வில்லை. பேருந்தில் 50% பயணிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டதாக தெரிவித்திருந்த நிலையில் அந்த பேருந்தில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே இருந்ததாக தெரியவில்லை. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.