திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவையில் பங்கேற்க முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்காக மக்கள் பலரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கின்றனர். தற்போது ஆர்ஜித சேவையில் பங்கேற்க முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசனம் தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆர்ஜித சேவைக்கான ஆன்லைன் டிக்கெட் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வினியோகம் செய்யப்பட்டு இருந்தது. இதில் பதிவு செய்தவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சுவாமி தரிசனத்திற்கு தங்களது டிக்கெட்டுகளை எந்த தேதியில் வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் தற்போது அறிவித்துள்ளது.