Categories
உலக செய்திகள்

ஜாலியாக சென்ற பெண்கள்…. திடீரென்று மோசமான வானிலை…. இறுதியில் நடந்த சோகம்….!!

ஆல்பஸ் மலையிலுள்ள ஏற்றத்தில் இரண்டு பெண்கள் சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விட்சர்லாந்த் ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஏற்றத்திற்கு இத்தாலியைச் சேர்ந்த 2 பெண்களும், 1 ஆணும் சென்றுள்ளார்கள். இவர்கள் மூவரும் மலையேற்றத்திலுள்ள vincent pyramid என்னும் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென வானிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் இவர்கள் மூவரும் கடும் பனியில் உறைந்துள்ளார்கள்.

இவர்களை மீட்பதற்கு இத்தாலிய மீட்புக்குழுவினர்கள் ஹெலிகாப்டர் ஒன்றில் சென்றும் கூட வானிலை மாற்றத்தால் அந்த மூவரையும் மீட்புக்குழுவினர்களால் சென்றடைய இயலவில்லை. எனவே சுவிட்சர்லாந்தை சேர்ந்த வழிகாட்டும் நபர்கள் அந்த மூவரையும் மீட்பதற்காக சென்றுள்ளார்கள்.

இருப்பினும் மலை ஏற்றத்திற்கு சென்ற 2 பெண்களும் பனியில் உறைந்து சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்கள். ஆனால் இவர்களுடன் சென்ற அந்த ஆண் மட்டும் உயிருடன் இருந்ததால் அவரை வழிகாட்டிகளின் உதவியோடு மீட்புக்குழுவினர்கள் ஹெலிகாப்டரின் மூலம் மீட்டு ஸ்விட்சர்லாந்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |