Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! கடன் வாங்க வேண்டாம்….! விட்டுக்கொடுக்க வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்.

இன்று அனைத்து விதமான நன்மைகளும் உங்களை தேடி வரும். ஆனால் இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டம தினமாகும் என்பதினால் மனதிற்குள் மட்டும் குழப்பங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அதனால் சந்தேக உணர்வு அதிகமாக இருக்கும். அதனை சரி செய்து கொள்ள வேண்டும். சில விஷயங்கள் நடக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் எதிர்த்து பேச வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மன அழுத்தத்தை அதிகப்படுத்தி கொள்ள வேண்டாம். கடன் பிரச்சினைகள் அவ்வப்போது தலை தூக்கினாலும் உங்களுக்கு கண்டிப்பாக கட்டுப்படும். அதிகப்படியான தொகையை இன்று கடனாக வாங்க வேண்டாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும். காரியங்களில் பின்னடைவு ஏற்படும்.

மற்றவர்களிடம் சிறு சண்டைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று உத்தியோகத்தில் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். மனதில் தைரியத்துடன் இருக்க வேண்டும். காதல் சிக்கலை ஏற்படுத்தும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியும். மாணவர்கள் எதிலும் தெளிவாக இருக்க வேண்டும். அவ்வப்போது ஏற்படக்கூடிய குழப்பங்கள் பிரச்சனையை ஏற்படுத்தும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் பச்சை

Categories

Tech |