தங்கும் விடுதியில் பெண் சடலமாக கிடந்ததை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அரியூர், ஜீவரத்தினம் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கழிவறையில் அந்தப் பெண் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் தமிழ்மணி என்பதும், கணவர் பெயர் ஆதியப்பன் என்றும் தெரியவந்துள்ளது. இவர் கழிவறையில் கால் தவறி விழுந்து அடிபட்டு இறந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் தமிழ்மணியின் முகவரி குறித்த விவரம் காவல்துறையினருக்கு தெரியாததால் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.