மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து பேசி வருகிறார்
தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்திப்பு நடைபெற்று வருகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இந்த நடவடிக்கையில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த அணை கட்டுவதற்கான திட்ட வரைவு உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறது. இதற்கு முதற் கட்ட ஒப்புதலையும் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு ஒன்று தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதனிடையே தான் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது.
இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கடந்த சில ஆண்டுகளாகவே உரிய முறையில் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மாதாந்திர வழங்க வேண்டிய நேரம் சரியாக வழங்கப்படுவதில்லை. அதிக மழை பெய்யும் போது உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கிறது. ஆகவே மாதந்தோறும் உரிய நீர் கிடைப்பதற்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும். ஏற்கனவே காவிரி நதிநீர் ஆணையம் இது தொடர்பாக ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற பட்டியலை வரையறுத்துள்ளது.
அதன்படி தண்ணீரை மாதம்தோறும் திறப்பதற்கு உத்தரவிட வேண்டும் தற்போது உரிய நீர் கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் மேகதாது அணை கட்டினால் மேலும் தமிழகத்திற்கு நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். ஆகவே இந்த அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேசி வருகிறார் அமைச்சர் துரைமுருகன். இந்த சந்திப்பின்போது நீர்வளத்துறை செயலாளர் காவிரி தொழில்நுட்பத்தின் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் உடன் இருக்கின்றனர்