Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் அட்லீ… வெளியான செம மாஸ் தகவல்…!!!

இயக்குனர் அட்லீ அடுத்ததாக தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

Atlee Kumar To Collaborate With Jr. NTR In His Debut Telugu Directorial?

இந்நிலையில் இயக்குனர் அட்லீ அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராஜா ராணி பட பாணியில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாகவும், ஜூனியர் என்.டி.ஆருக்கு கதை பிடித்துப்போனதால் இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் விரைவில் இயக்குனர் அட்லீ தெலுங்கு சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |