விவசாயியை அடித்து கொன்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் இவருக்கு சொந்தமான வயலானது நல்லேந்திரன், சடையாண்டி, பெரியசாமி ஆகியோரின் வயலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் நல்லேந்திரன் கதிர் அறுக்கும் இயந்திரத்தை தனது வயலில் இருந்து வெளியேற்றுமாறு பெரியசாமி, பாண்டியன் ஆகியோரிடம் சண்டையிட்டுள்ளார். இதனை பார்த்த சுப்பிரமணி அவர்களிடம் சென்று பேசியபோது தகராறு முற்றவே நால்வருக்கும் மோதல் ஏற்பட்டது.
அம்மோதலில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்ரமணியனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சுப்பிரமணியை அடித்துக் கொன்றதாக நல்லேந்திரன், பெரியசாமி, பாண்டியன் ஆகியோரை கைது செய்து தீவிர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.