இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. இவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பல்வேறு ஆப்களையும் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் மிக முக்கியமாக ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பேடிஎம் ஆப் அனைவரும் பயன்படுத்து வரும் நிலையில் இதில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, செல்போன் ரீசார்ஜ், பணபரிவர்த்தனை, சிலிண்டர் புக்கிங், கரண்ட் பில், டிடிஎச் ரீசார்ஜ், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை போன்ற பல வசதிகள் இருக்கின்றன.
அது மட்டுமல்லாமல் உடனடி கடன் போன்ற கடன் வசதியும் பேடிஎம் வழங்குகிறது. இந்நிலையில் PostPaid Mini Service என்ற புதிய கடன் சேவையை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் கடன் கடன் வாங்கும் பட்சத்தில் வட்டி எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்த கடனை 30 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் .சிறிய தொகை என்றாலும் கூட வட்டி கிடையாது. இதில் 250 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும். இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.