ஆம்பூர் அருகில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் கைப்பற்றி காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் விவசாய நிலப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு பாம்பு பிடிக்கும் வாலிபரை அழைத்து சென்று விவசாய நிலத்தில் கிடந்த 10 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் மலைப்பாம்பை பாலித்தீன் பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்று காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.