Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறுதிகட்டத்தை எட்டிய ‘ஆர்.ஆர்.ஆர்’ படப்பிடிப்பு… படக்குழு எடுத்த அதிரடி முடிவு…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

RRR' makers launch new poster on Ugadi

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை டிவிவி தானய்யா தயாரிக்கிறார். தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உக்ரைனில் ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் அனைவரும் உக்ரைன் செல்ல உள்ளனர்.

Categories

Tech |