Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“என் சாவுக்கு அவன்தான் காரணம்” கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள டி.குன்னத்தூர் பகுதியில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நர்மதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நர்மதாவின் தந்தையான குமரவேல் இறந்துவிட்டதால் ஏனாதிமங்கலம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தாய் ஜோதியுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் நித்தியானந்தன் என்பவருக்கும் நர்மதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுவந்துள்ளது. அதன்பின் நாளடைவில் அவர்களின் பழக்கம் காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் தனிமையில் பேசி வந்தனர்.

இந்நிலையில் நித்தியானந்தன் நர்மதாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் இருந்துள்ளார். இதனால் நர்மதா கர்ப்பிணியான நிலையில் அவரின் குடும்பத்தினருக்கு இவர்களின் பழக்கம் தெரியவந்தது. இதனையடுத்து நித்யாநந்தன் வீட்டிற்கு சென்று நர்மதாவின் குடும்பத்தினர்கள் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டனர். ஆனால் நித்தியானந்தன் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் நர்மதாவின் உறவினர்கள் வேறு வழியில்லாமல் அவரது கருவை கலைத்து விட்டனர்.இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நர்மதா தனது வீட்டின் மின் விசிறியில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் நர்மதாவின் உடலை மீட்டு விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நர்மதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நர்மதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு கடிதத்தில் நித்தியானந்தன் தான் எனது சாவிற்கு காரணம் என எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |