Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” மடக்கி பிடித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மதுபான கடையில் கள்ளநோட்டை மாற்றுவதற்கு முயன்ற வாலிபரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரம்பு பகுதியில் மதுபான கடை ஒன்று இருக்கின்றது. அங்கு வாலிபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து உயர்ந்த மது பாட்டிலை கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுத்த ரூபாய் மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பரிசோதனை செய்து பார்த்ததில் கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து வாலிபரிடம் ஊழியர்கள் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து ஊழியர்கள் பொதுமக்களின் உதவியுடன் வாலிபரை விரட்டிச் சென்று பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அவரை சோதனையிட்டதில் அவரிடம் மேலும் சில கள்ள ரூபாய் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த பைஜீ  என்பதும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து பைஜீயை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 3,500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இவருடன் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |