Categories
உலக செய்திகள்

இனி இதெல்லாம் தேவை இல்ல..! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

சட்டபூர்வமான கொரோனா விதிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் அதனால் பெருமளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பூசியை அனைவரும் கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வைரஸால் கொரோனா விதிகள் விலக்கப்படுவதில் காலதாமதமும் ஏற்பட்டது. இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்கள் சந்திப்பில் வருகின்ற 19-ஆம் தேதிக்கு பிறகு சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் ஆகியவை கட்டாயப்படுத்தப்படாது என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் பொதுமக்கள் கூட்டமாக செல்லும் இடங்களில் முக கவசம் அணிவது குறித்து அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா விதிகள் ரத்து செய்யப்படுவது குறித்து வருகின்ற 19-ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மது கடைகள் மற்றும் பப்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க அவசியமில்லை என்று கூறியுள்ளார். மேலும் விளையாட்டு, நாடகம், இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்போம், வணிகங்கள் மற்றும் இரவு விடுதிகள் என அனைத்தையும் மீண்டும் திறக்க அனுமதிப்போம் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |