Categories
தேசிய செய்திகள்

எவ்வளவு நேரம் வெயிட் பண்றது… கோபத்தில் ரிப்பனை கிழித்த தெலுங்கானா முதல்வர்… வைரலாகும் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் , ராஜண்ணா ஸ்ரீசீலா மாவட்டத்தில் உள்ள அரசு குடியிருப்பு ஒன்றை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்துவைத்தார். புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு பகுதிகளை திறந்து வைப்பதற்காக முதல் மந்திரியும், உயரதிகாரிகள் பலரும் வந்திருந்தனர். அப்போது ஒரு குடியிருப்பின் நுழைவாயிலில் ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது.

ஆனால் விழா ஏற்பாடு செய்தவர்கள் ரிப்பனை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை கொண்டு வர மறந்து விட்டனர். பின்னர் சிறிது நேரம் காத்திருந்த சந்திரசேகர் ராவ் தாமதமானதால் பொறுமையை இழந்து ரிப்பனை பிடித்து இழுத்து குடியிருப்பு பகுதியை திறந்து வைத்தார். இது சம்பந்தப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

Categories

Tech |