Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க வேண்டும்…. விஜயகாந்த் டுவீட்…!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்து ஜூலை 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா பாதிப்பு குறைந்த காரணத்தால் தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே மூன்றாம் அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும், மக்களையும் நாட்டையும் பாதுகாக்க தமிழக அரசு தளர்வுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |