மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் இருக்கும் வாய்க்காலில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் எரிந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி ரங்கநாதபுரம் பகுதியில் வசித்த தனம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட தனம் அங்குள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் வாங்கி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.