Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நாளை மகப்பேறு குழந்தை நல சிகிச்சை மையம் திறப்பு…. முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10.50கோடியில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு குழந்தை நல சிகிச்சை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். இன்று திருவாரூர் வரும் அவர் இரவு சன்னதி தெருவில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுக்கிறார். நாளை காலை மகப்பேறு மருத்துவமனையை திறந்து வைத்தபின் திருக்குவளை செல்ல இருக்கிறார்.

Categories

Tech |