Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்று வலி சரி ஆகல… பெரும் அவதிப்பட்ட மூதாட்டி… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி பகுதியில் வடக்கு ரத வீதியில் சீனிவாசன் என்பவர் அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு பல்வேறு மருந்துகள் எடுத்தும் தீரவில்லை. இதனையடுத்து ஜெயலட்சுமி மிகவும் மனமுடைந்து இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வயிற்று வலியால் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் ஜெயலட்சுமி மயக்கமடைந்த நிலையில் இருப்பதை பார்த்த அவரது மகன் முனிராஜ் உடனடியாக அவரை போடி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து மேல் சிகிச்சைக்காக தேனி  அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஜெயலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |