பணியின்போது பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சப் பணத்தை ஓய்வு பெற்ற பின் தவணை முறையில் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய ஐசிஎப் முன்னாள் தலைமை மெக்கானிக்கல் பொறியாளரை சிபிஐ கைது செய்துள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் முதன்மை மெக்கானிக்கல் பொறியாளராக பணியாற்றி வந்தவர் காத்பால். இவர் தனது பதவியில் இருந்து கடந்த மார்ச் 31 ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இவர் பதவியில் இருந்த காலகட்டத்தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்து ஓய்வு பெற்ற பிறகு லஞ்ச பணத்தை பெற்ற ஜசிஎப் முன்னாள் தலைமை பொறியாளர் காத்பால் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. தனியார் நிறுவனம் அவரிடம் பணம் வழங்கும் போதே சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு தொடர்பான 9 இடங்களில் சோதனை நடத்தி ரூ.2,75,000 மற்றும் 23 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.