கரடிகள் ஊருக்குள் நுழைந்து பேரிக்காய்களை பறித்து சாப்பிடுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை தோட்டத்தில் பேரிக்காய் மரங்களை விவசாயிகள் ஊடுபயிராக பயிரிட்டு உள்ளனர். தற்போது அங்கு பயிரிடப்பட்ட மரங்களில் இருந்து காய்கள் காய்த்து குலுங்குகின்றன.
இந்நிலையில் கரடிகள் கிராம பகுதிக்குள் நுழைந்து தங்களுக்கு பிடித்த பேரிக்காய்களை பறித்து தின்கின்றன. இவ்வாறு பேரிக்காய்கள் சாப்பிடுவதற்காக ஊருக்குள் நுழையும் கரடிகள் பொது மக்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.