Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாதுவாக மாறிவிட்டது… 3 பேரை கொன்ற காட்டு யானை… வனத்துறையினரின் சிறப்பான முயற்சி…!!

மூன்று பேரை கொன்ற ஒற்றை காட்டு யானையை 5 மாதங்களுக்குப் பிறகு கூண்டில் இருந்து விடுவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி பகுதியில் சுற்றி வந்த ஒற்றை காட்டு யானை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தந்தை மகன் உட்பட 3 பேரை தாக்கி கொன்ற இந்த ஒற்றை காட்டு யானையை கடந்த பிப்ரவரி மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன் பிறகு இந்த காட்டு யானையானது முகாமில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது கடந்த 5 மாதங்களாக இந்த காட்டு யானைக்கு பசுந்தீவனங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை அளித்து பராமரித்து வந்தால் படிப்படியாக அதன் மூர்க்கத்தனம் சாதுவாக மாறிவிட்டது. இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு பாகன்கள் கூண்டுக்குள்  கொண்டு சென்று அந்த யானையை பழக்கப்படுத்தியதால் வனத்துறையினர் அதனை வெளியே கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

அதன்படி காலை 10:15 மணி அளவில் கூண்டுக்குள் இருந்த காட்டு யானையை வெளியே கொண்டு வந்து கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர். அதன்பின் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற கும்கி யானைகளை மரக்கூண்டை சுற்றி நிறுத்தி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பராமரித்து வந்த பாகனின் கையில் இருந்த குச்சியை தனது தும்பிக்கையால் பிடித்தவாறு காட்டு யானை அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளது. அதன்பின் இரும்பு சங்கிலியால் ஒரு மரத்தில் அந்த காட்டு யானையை கட்டி வைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Categories

Tech |