Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்களா?… வெளியான மாஸ் தகவல்..!!!

நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  தற்போது இவர்  கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘D43’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இவர் ஆயிரத்தில் ஒருவன் 2, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம் என ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

Dhanush to team up with Jawahar yet again - DTNext.in

ஏற்கனவே தனுஷ்- மித்ரன் ஜவஹர் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |