Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுல வீடியோ எடுக்கலாமா…? நைசாக தப்பித்த வாலிபர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் கேமராக்களை விற்பனை செய்யும் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் பாலசுப்பிரமணியம் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடைக்கு சென்ற மர்ம நபர் ஒருவர் பாலசுப்ரமணியனிடம் கேமரா வாங்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஒவ்வொரு மாடலாக அந்த நபரிடம் பாலசுப்பிரமணியம் எடுத்து காண்பித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் ஒரு மாடல் கேமராவை தேர்வு செய்து அதில் வீடியோ எடுத்து பார்க்கலாமா என்று பாலசுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வெளியே சென்று வீடியோ எடுப்பது போல் நடித்த அந்த மர்ம நபர் திடீரென அங்கு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கடை உரிமையாளர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசித் தேடி வருகின்றனர்.

Categories

Tech |