Categories
உலக செய்திகள்

வான வேடிக்கைகளுடன் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்…. கண்டு ரசித்த அதிபரின் குடும்பத்தினர்….!!

அமெரிக்காவின் 245 ஆவது சுதந்திர தினம் வான வேடிக்கைகளுடன் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டனில் 245 ஆவது சுதந்திர தினம் வான வேடிக்கைகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரின்  குடும்பத்தார்கள் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து கண்டு மகிழ்ந்தனர். இதுவே அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சுதந்திர தின விழாவாகும்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, கடந்த 16 மாதங்களுக்கு பிறகு கொரோனாவிலிருந்து அமெரிக்க நாடு மீண்டு வந்ததை இந்த சுதந்திர தினத்தில் அனைத்து அமெரிக்கர்களும் கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் வெகு நாட்களுக்கு பிறகு அமெரிக்காவில் வாழும் மக்கள் மீண்டும் ஒன்றிணைந்து வருகின்றனர். ஆனால் கொரானாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |