ஈராக்கை ஒட்டியுள்ள பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானங்கள் 40 டன் அளவிற்கு குண்டுகளை வீசி தாக்கியுள்ளது.
மத்திய ஈராக்கில் உள்ள டைகிரிஸ் நதியின் நடுப்பகுதியில் கானஸ் என்ற தீவு பகுதி உள்ளது. அப்பகுதியில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்காவிற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த நவீன ரக அமெரிக்க போர் விமானங்கள் டைக்ரீஸ் நதியின் குறிப்பிட்ட பகுதியில் 40 டன் அளவிற்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். விமானங்கள் தாக்குதல் நடத்தி வந்த பொழுது மறுபுறம் தரைவழியாக ஈராக்கிய அரசுப்பணிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் எத்தனை ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.