நாட்டில் வன வளங்களை பாதுகாத்து மேலாண்மை செய்யும் வகையில் பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கூட்டு ஒப்பந்தத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், பழங்குடியினர் விவகார அமைச்சகம் சேர்ந்து இன்று கையெழுத்திடுகின்றன என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதிகளில் பரம்பரையாக வாழ்ந்துவரும் பழங்குடியினருக்கு வனப்பகுதிகளில் உரிமை அளித்து, அங்கு அவர்கள் பாரம்பரிய தொழில் புரியும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அதன் செயலர் ராமேஷ்வர், பிரசாந்த் குப்தா, பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, அதன் செயலர் அனில் குமார் ஜா மற்றும் மாநில வருவாய் துறை செயலர்கள் பங்கேற்க உள்ளனர்.