தன்னுடைய உயிரையும் துச்சமாக கருதி கடலினுள் உயிருக்கு போராடிய இலங்கை பெண்மணியை காப்பாற்றிய பாகிஸ்தானியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் Ajman marina என்னும் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகம்மது என்பவர் சென்றுள்ளார். அப்போது திடீரென கடலுக்குள் இருந்து “என்னை காப்பாற்றுங்கள்” என்று கூறிக்கொண்டே ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டுள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முகம்மது தன்னுடைய உயிரையும் துச்சமாக கருதி கடலுக்குள் விழுந்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார். அதன்பின் இவர்கள் 2 பேருக்கும் வெளிநாட்டு சிவில் குழுவினர்கள் மருத்துவ முதலுதவியை அளித்துள்ளார்கள்.
இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகம்மது தன்னுடைய உயிரையும் துச்சமாக கருதி அந்த பெண்ணை காப்பாற்றிய செயல் மிகவும் பாராட்டுக்குரியது என்றுள்ளார். மேலும் கடலுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.