துலாம் ராசி அன்பர்களே..!
பிள்ளைகளின் உடல் நிலையில் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகள் குறையும். பிரச்சினைகளை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்துக்கொள்வீர்கள். இன்று வெற்றி பெறும் நாளாக இருக்கும். செய்யக்கூடும் செயலில் துணிச்சல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனைவரிடமும் ஆலோசனை கேட்டு காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். காதலே உள்ளவர்களுக்கும் முன்னேற்றம் தருவதாக அமையும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை நிறம்.