நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான மாநிலங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. மலைப் பிரதேசங்களுக்கு செல்பவர்கள் விதிகளை மீறுவதாக சுகாதாரத் துறை இணைச் செயலாளர் வேதனை தெரிவித்துள்ளார்.