Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி நடவடிக்கை… 2 பேர் கைது… ஜே.சி.பி.இயந்திரம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் ஜே.சி.பி இயந்திரம் உட்பட டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சண்முகாபுரம் ஓடை பகுதியில் அடிக்கடி மணல் கடத்தல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெருநாழி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறையினர் சண்முகாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர்கள் குமாரபுரத்தை சேர்ந்த தங்கபாண்டி(23), திம்மநாதபுரத்தை சேர்ந்த முருகவேல்(22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய ஜே.சி.பியும், டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |