Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரணத்தை கண்டுபிடிச்சிட்டாங்க…கால்நடை மருத்துவர்களின் ஆய்வு…தெரிய வந்த உண்மை…!!

ஒரே கிராமத்தில் ஏரளமான ஆடுகள் இறந்ததால் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில்  சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் குறித்து நேற்று மானாமதுரை கவுன்சிலர் அண்ணாதுரை அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அம்மனுவின் அடிப்படையில் இன்று கால்நடை மருத்துவர்கள் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் இறந்தவ ஆடுகளுக்கு சளி இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் ஆடு வளர்ப்பவர்கள் தாங்களாகவே மருந்து வாங்கிக் கொடுத்ததன் காரணமாக சளி அதிகமாகி சுவாசிக்க முடியாமல் ஆடுகள் இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் அப்பகுதி மக்களிடையே ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டால் உடனே கால்நடைத்துறையை அணுகுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர். இதனால் ஆடுகள் இருப்பதன் காரணம் தெரியாமல் இருந்த கேள்விக்கு முடிவில் விடை கிடைத்தது.

Categories

Tech |