Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி கொடுத்துட்டாங்க…பொதுமக்கள் மகிழ்ச்சி… திண்டுக்கல்லில் கூடிய வாடிக்கையாளர்கள்…!!

உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் உற்சாகமாக உட்கார்ந்து சாப்பிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா அதிகமாக இருப்பதால் உணவகங்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில்  தமிழக அரசு அளித்துள்ள கட்டுப்பாடுகளில் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  திண்டுக்கல்லில் மக்கள் உணவகங்களில் மகிழ்ச்சியாக உட்கார்ந்து சாப்பிட்டனர்.

மேலும் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முகக்கவசம் மற்றும் சானிடைசர் பயன்படுத்துமாறு ஹோட்டல் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் மக்கள் சமூக இடைவெளியுடன் உணவகங்களில் உட்கார்ந்து மகிழ்ச்சியாக சாப்பிட்டுள்ளனர்.மேலும் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் சாப்பிடும் வகையில் இருக்கைகளை தயார்படுத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |