சென்னை அடுத்த மாதவரத்தில் அரசுக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து செய்த தந்தை மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாதவரம் பொன்னியம் மேடு பகுதியில் அமைந்துள்ள தமிழக அரசின் அலுமினிய நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 4.45 ஏக்கர் நிலம் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. இதனை அபகரிக்க திட்டமிட்டு பிச்சைமுத்து மற்றும் அவரது மகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் போலியான ஆவணங்கள் தயார் செய்துள்ளனர்.
பிச்சை முத்து பெயரில் அந்த இடம் இருந்ததாகவும் அவர் தனது மகன் ஹரி கிருஷ்ணனுக்கு எழுதிக் கொடுத்தது போன்ற ஆவணங்களை தயாரித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அலுமினிய நிறுவனம் கொடுத்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்துள்ளனர்.